districts

img

பாபநாசம்-சாலியாமங்கலம் ரயில்வே கேட்டால் தொடரும் நெரிசல்

பாபநாசம், ஜூலை 13-

     பாபநாசம்-சாலியாமங்கலம் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

   தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம்-சாலியமங்கலம் சாலை முக்கியமான சாலைகளில் ஒன்று. இந்தச் சாலை யில் தனியார் மேல் நிலைப்பள்ளி, கல்லூரி உள்ளது. தவிர ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

   இந்தச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே கேட் தினமும் குறைந்தது பத்து முறை மூடப்படுகிறது.  இதனால் இரு பக்கமும் ஏராளமான வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சிர மத்திற்கு ஆளாகின்றனர்.

    கேட் மூடி, திறக்கப்பட்டால் போக்குவரத்து இயல்பு  நிலைக்கு திரும்ப 15 நிமிடங்களுக்கு மேலாகிகிறது. நெரி சலில் ஆம்புலன்சும் சிக்கிக் கொள்கிறது. இங்கு மேம் பாலம் அமைக்க வேண்டும் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.