districts

அவுட்சோர்சிங் முறைக்கு எதிர்ப்பு ஜூலை 12-இல் திருச்சியில் மறியல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 6-

     சிஐடியு திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத்  தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

    வேலை அறிக்கையை மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் வாசித்தார். மாநில முடிவுகள் குறித்து மாநிலச் செயலாளர் தலைட்சுமி பேசி னார்.

    கூட்டத்தில், தமிழ்நாடு அரசுத்துறை  நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறை யைக் கைவிட வலியுறுத்தியும், அரசுத் துறைகளில் உள்ள லட்சக்கணக்கான  காலிப் பணியிடங்களைப் படித்த இளை ஞர்களைக் கொண்டு நிரப்ப வலியுறுத்தி யும் ஜூலை 12-ஆம் தேதி மாநகராட்சி அலுவலகம் முன் மறியல் நடத்த முடிவு செய்துள்ளனர்.