districts

அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர வாய்ப்பு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 20-

    அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவ-மாணவிகளுக்கு திருச்சி ராப்பள்ளி ஆட்சியர் பிரதீப்குமார்/

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு:

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணி கண்டத்தில் உள்ள அரசுதொழிற் பயிற்சி  நிலையத்தில் பொருத்துநர், மின்சார பணி யாளர், கம்மியர் மோட்டார் வண்டி ஆகிய பிரிவுகளில் பயிற்சியில் சேர்வதற்கு பத்  தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்  டும். கம்பியாள் மற்றும் பற்றவைப்பவர் பிரிவுகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருக்கவேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது. மேலும் இந்நிலை யத்தில் இவ்வாண்டு புதிதாக துவங்கப் படவுள்ள இன்டஸ்ட்ரீஸ் 4.0,தொழில் நுட்ப மைய பிரிவுகளுக்கு எஸ்சிவிடி முறையில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாண வியர்களுக்கு மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் ரூஆட்டோமேசன் மற்றும் இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னிசியன் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன.

    பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் பயிற்சிகட்டணம் கிடை யாது. பயிற்சியின் போதுமாதம் தோறும் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும். அரசுப்பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மூவாலூர் இராமாமிர்தம் உயர் கல்வி திட்டத்தின் கீழ் ரூ.1000 மாதாந்திர கூடுதல் உதவித் தொகை வழங்கப்படும் இலவச மடிக்கனிணி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், பாடபுத்தகங்கள், வரைபட கருவிகள் மற்றும் இலவச பஸ் பாஸ்  வழங்கப்படும். நிலைய பயிற்சியாளர களுக்கு இலவச விடுதிவசதி உண்டு. கடந்த  13-ஆம் தேதி முதல் மணிகண்டத்தில் உள்ள  அரசுதொழிற் பயிற்சிநிலையத்தில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. பயிற்சி யில் சேர விருப்பமுள்ளவர்கள் அரசு தொழிற் பயிற்சிநிலையம், மணிகண்டத் திற்கு மாற்றுசான்றிதழ், மதிப்பெண் பட்டி யல், சாதிச்சான்றிதழ், முன்னுரிமைச் சான்று, ஆதார்அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், ஆகியவை ஆவணங்களுடன் பயிற்சியில் நேரிடையாக சேரலாம்.

     மேலும் தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கை தொடர்பாக அரசுதொழிற் பயிற்சி நிலைய முதல்வர் அவர்களை நேரிலோ அல்லது 9499055723, 8903611348 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள லாம்.