districts

img

சிஐடியு 54 ஆம் ஆண்டு அமைப்பு தின விழா

திருச்சிராப்பள்ளி, மே 30- சிஐடியு (இந்திய தொழிற்சங்க மையம்) 1970 ஆம் ஆண்டு மே  மாதம் 30 ஆம் தேதி துவங்கப் பட்டது. சிஐடியு தொழிற்சங்கத்தின 54 ஆம் ஆண்டுஅமைப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகரில் 54 இடங்களில் சிஐடியு கொடியேற்றி, பொதுமக்க ளுக்கு  இனிப்பு வழங்கி கொண்டா டப்பட்டது. ஸ்ரீரங்கம் பகுதி சிஐடியு தரைக் கடை, சாலை, ஆட்டோ, கட்டுமான சங்கங்கள் சார்பில் கொடியேற்று தல், நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. திருவானைக்காவல் நாலு கால் மண்டபம் அருகே நடந்த நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிக்கு சிஐடியு ஸ்ரீரங்கம் பகுதி ஒருங்கிணைப்பா ளர் ரகுபதி தலைமை தாங்கினார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலா ளர் ரெங்கராஜன், தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் செல்வி, குடிநீர் வடிகால் வாரிய சங்க மாவட்ட செயலாளர் மருதைராஜ், ஆகியோர் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.   சோனா - மீனா தியேட்டர் அருகில் உள்ள அரசு போக்கு வரத்து கழக மப்சல் டெப்போ முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன், தலைமை வகித்தார். மாநர் மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன் சங்க கொடியை ஏற்றினார். டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் சிஐடியு சங்க புதிய பெயர்பலகை திறக்கப்பட்டு கொடியேற்றப் பட்டது. திருவாரூர்  சிஐடியு திருவாரூர் மாவட்ட அலுவலகம் முன்பாக அமைக்கப் பட்ட  கொடிமேடையில் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் கொடி யேற்றி வைத்து உரையாற்றினார்,    இந்நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்ட தலைவர் எம்.கே.என் அனிபா தலைமை வகித்தார், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி  வாழ்த்துரை வழங்கினார்.

;