districts

அறநிலையத்துறை சார்பில் ஏழை ஜோடிகளுக்கு திருமணம்

தஞ்சாவூர், ஜூலை 7-  

     தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தவாறு, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி நீலகண்டப் பிள்ளையார் ஆலயத்தில், வெள்ளிக்கிழமை இரு ஏழை  ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப் பட்டது.  

   சித்தாதிக்காடு கோ.சரவணன் - பூக் கொல்லை ம.சோபிகா மற்றும் பேராவூரணி சு.மாதவன்- சின்னமனை ஜெ.நித்தியா ஆகிய  இரு ஜோடிகளுக்கு, பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலை மையில் திருமணம் நடைபெற்றது.

    பேராவூரணி திமுக ஒன்றியச் செயலா ளர் க.அன்பழகன், இந்து சமய அறநிலையத் துறை பேராவூரணி சரக ஆய்வாளர் இரா.அமுதா, நீலகண்ட பிள்ளையார் ஆலய செயல் அலுவலர் என்.ரவிச்சந்திரன், பரக்க லக்கோட்டை திருக்கோயில் சிறப்பு பணி  செயல் அலுவலர் வடிவேல்துரை, கோவில்  அறங்காவலர்கள் உள்ளிட்ட முடப்புளிக் காடு கிராமத்தார்கள், கோவில் பணியாளர் கள், மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.  

    மணமக்களுக்கு இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் 4 கிராம் தங்கத்தாலி, கட்டில், பீரோ, மற்றும் 62 வகை சீர்வரிசைப் பொருட்களுடன் திருமணம் நடத்தி வைக்கப் பட்டது. தொடர்ந்து மணமக்கள், உறவி னர்கள், பொதுமக்கள் சுமா‌ர் 300 பேருக்கு விருந்து வழங்கப்பட்டது.

     பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர்  நா.அசோக்குமார், தனது சொந்தப் பணத்தி லிருந்து தலா ரூ.5,000 வீதம் ரூ.10 ஆயி ரத்தை மணமக்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில்  திருமண மண்டபத்தில் இந்து சமய அற நிலையத் துறையின் சார்பில் வெள்ளியன்று 10 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு 10 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார். நக ராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பி னர்கள், இந்துசமய அறநிலையத் துறை  இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணை யர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து  கொண்டனர்.

;