districts

img

வீரம் செறிந்த மண்ணின் மக்கள் விடுதலைக்கான அலுவலகம்

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத் தின் வர்க்கப் போராட்டங்களின் களமாகவும், தியாகத்தின் விளை நில மாகவும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மையமாகவும் தலைவர்களின் தலை மறைவு வாழ்வின் கூடாரமாகவும் இன்றைய திருவாரூர் மாவட்டத்தின் முத்துப்பேட்டை பகுதி திகழ்ந்தது என்பது தஞ்சை மாவட்ட கம்யூ னிஸ்ட் இயக்க வீர வரலாற்றில் பெருமைமிகு செய்தியாகும்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முத்துப்பேட்டை ஒன்றிய கட்சி  அலுவலகம் மக்கள் போராளி வீ.முத்து வீரன் நினைவாக 18.05.2024 அன்று மாலையில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐவி.நாகராஜன் அலுவ லகத்தினை திறக்கவும், செங்கொடியை கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி ஏற்றி வைக்கவும் இருக்கின்றனர்.  முத்துப்பேட்டை பகுதியில் கருவாய் துவங்கிய கட்சி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத் தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு பல செல்கள் (கிளை கள்) அமைத்திருந்தனர். அவைகளை  ஒருங்கிணைத்து 1940 இல் முத்துப் பேட்டை பகுதியிலுள்ள பாண்டி கிரா மத்தில் வைத்தியநாததேவர் வீட்டில் தான் முதன் முதலாக மாவட்ட அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில் முற்போக்கு எண்ணம் கொண்ட தேச விடுதலைக்கும் சமூக விடுதலைக்கும் பாடுபட்ட தோழர்களை பாண்டி வைத்தியநாதன், முத்துப்பேட்டை டெய்லர் சுந்தரேசன், கே.பி.நடராஜன், மாயவரம் மா.சட்டையப்பன், மணலி  சி.கந்தசாமி, பாங்கல் சாமிநாதன், விட்டுகட்டி ஏ.வடிவேல், அறந்தாங்கி  பெரியப்பா, மணலூர் கே.மணியம் மாள் மற்றும் பலர் கலந்துகொண்ட னர். அதில் கேரள மாநிலத்தை சேர்ந்த நெடுங்காடி ராமச்சந்திரன் கட்சி யின் மாவட்ட அமைப்பாளராக செயல் பட்டார். சி.எஸ்.சுப்பிரமணியன், ஏ.கே. கோபாலன் ஆகியோர் கலந்து கொண்டு வழிகாட்டினர். 

தலைமறைவு காலத்தின் கூடாரமாய்...

1948 மார்ச் மாதத்திலிருந்து கட்சி  தடை செய்யப்பட்ட காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்கள் 1950  ஜனவரி மாதம் வரை தலைமறை வாக இருந்து இயக்கப் பணி  செய்ய கூடாரமாக முத்துப்பேட்டை  பகுதிதான் விளங்கியது. கேரளா விலிருந்து நெடுங்காடி ராமச்சந்திரன், ஏ.கே.கோபாலன், எம்.வி.சுந்தரம், மணலி கந்தசாமி, வாட்டாகுடி இரணி யன், ஜாம்புவானோடை சிவராமன்,  மறவாக்காடு கிட்டு, கோட்டூர் ராசு,  ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், எம்.காத்த முத்து, ஏ.எம்.கோபு, அறந்தாங்கி பெரியப்பா, சேரங்குளம் அமிர்த லிங்கம் போன்ற பல கம்யூனிஸ்ட் தலை வர்கள் தலைமறைவாக பட்டுக் கோட்டை, கந்தர்வகோட்டை போன்ற பகுதிகளில் தலைமறைவாக இருந்து கொண்டு காங்கிரஸ் அரசின்  காவல்  துறையின் தேடலுக்கும், நெருக்கடிக் கும் அஞ்சாமல் கண் துஞ்சாமல் இயக்கப் பணியாற்றினார்கள்.  உழைப் பாளி மக்களின் விடியலுக்காக, தொழி லாளி வர்க்க விடியலுக்காக பாடுபட்ட னர். 

சிவராமன் சிந்திய ரத்தத்தில்...

முத்துப்பேட்டை ஜாம்புவா னோடை கிராமத்தில் 1925 ஆகஸ்ட்  10 இல் பிறந்த சிவராமன் கம்யூனிஸ்ட்  இயக்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக வும் உழைப்பாளி மக்களின் உரிமை காக்கும் செங்கொடி இயக்கத்தின் இளம் போராளியாகவும் ஜமீன்தார் கள் மற்றும் நிலப்பிரபுத்துவ கொடு மைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்  முன்னணி வீரராகவும் திகழ்ந்தார்.   திருத்துறைப்பூண்டி, முத்துப் பேட்டை, பட்டுக்கோட்டை வட்ட பகுதி களில் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்க ளின் விடியலுக்காக செங்கொடி இயக் கத்தை கட்டுவதில் முன்னத்தி ஏராக விளங்கினார் சிவராமன். நெடும்பலம் சாமியப்ப முதலியார் பண்ணையின் ஆதிக்கத்திற்கும், கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திட, உணவு பொருட்களை பதுக்கி  வைத்ததை தடுத்திட களப்பால் குப்பு சாமி, பி.எஸ்.தனுஷ்கோடி, வேதை யன் போன்ற பல தோழர்களுடன் மக்களை திரட்டி நெடும்பலம் சாமி யப்ப முதலியார் வீட்டை முற்றுகை யிட்டு செய்து நெல், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை உழைப்பாளி மக்களுக்கு பகிர்ந்தளித்தனர். இதன் பிறகு நெடும்பலம் சதி வழக்கு, பாண்டி ரயில்வே நிலையம் அருகில் ரயிலை மறிக்க திட்டம் தீட்டியதாக பொய் வழக்கு போன்றவற்றையும் போட்டு காங்கிரஸ் அரசின் காவல் துறை சிவராமன் தலைக்கு விலை வைத்து தேடியது.  தலைமறைவு காலத்தில் இரவு பகல் கண் விழித்து  பட்டினி பசியால் இளைப்பாறாத நிலையில் சிவராமன் டீக்கடையில் டீ  குடித்தபோது துரோகிகளால் காவல்  துறைக்கு தகவல் சொல்லி பிடிக்கப் பட்டு துப்பாக்கியால் 1950 மே 3 இல்  நாட்டுச்சாலையில் சுடப்பட்டார். கம்யூ னிஸ்ட் வாழ்க! செங்கொடி வாழ்க!!  என வீர கோஷமிட்டவாறே நெஞ்சில்  செங்குறுதி வழிந்தோடிய நிலையில்  வீர தியாகி சிவராமன் வீரமரண மடைந்தார். இவர் பிறந்து களமாடிய மண்ணில் அதே லட்சிய நோக்கில்  செங்கொடியை உயர்த்திப்பிடிப்போம். 

முத்துவீரன் களப்பணியும் நினைவகமும்

தோழர் முத்துவீரன் முத்துப் பேட்டை ஒன்றியம் மேலப்பெருமழை கிராமத்தில் 1953 ஆம் ஆண்டு பிறந் தார். பள்ளியில் படித்துக் கொண்டி ருந்த போதே, பொதுவுடமைக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா கமிட்டியின் செயலாளராக பணி யாற்றிய எம்.பி.கண்ணுசாமி அவர் களுக்கு, பல கடிதங்களை எழுதி தான் கட்சியில் சேரவேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அத்துடன் நேரில்  சென்று அவரை சந்தித்து 1979 ஆம்  ஆண்டு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகனும் உள்ளனர்.  முதலாவதாக வாலிபர் இயக்கத் தில் இணைந்து பணி செய்யும்போது சென்னை நோக்கி நடைபெற்ற சைக்கிள் பிரசாரத்தில் பங்கெடுத்து இளைஞர்களை அணி திரட்டினார். மேலும் கட்சியின் தாலுக்கா கமிட்டி  உறுப்பினராகவும், விவசாய சங்கத்தின் தாலுக்கா கமிட்டி செயலா ளாராக இருந்து காவிரி தண்ணீருக்கா கவும், வறட்சி நிவாரணம் கோரியும் பல  போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டார். இந்நிலையில் 1989 ஆம் ஆண்டு முத்துப்பேட்டை ஒன்றியம் தனியாக பிரிந்த போது, எடையூரில் ராமமடத்தில் நடைபெற்ற மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில்  முத்துப்பேட்டை ஒன்றிய செயலா ளராக தேர்வு செய்யப்பட்டார். 1992 ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத் தலை வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டு முறை மக்கள் பணியாற்றினார். அப்போது மேலப்பெருமழை கிராமத் திலிருந்த குளங்களை ஊராட்சியில் இணைத்து மீன்பிடிப்பதற்காக குளங்களை ஏலம் விடும் முறையை முதன் முதலில் ஊராட்சியில் கொண்டு  வந்தார்.  கட்சியின் பல முத்திரை பதித்த  பல போராட்டங்களை நடத்தினார். பாண்டி ரயில்வே கேட் அருகிலிருந்த தலித் வீடுகளை காலி செய்து மாற்று  இடம் கொடுத்து வீடு கட்டும் பிரச்சனை யில் குமாரசாமி ராஜா, பண்ணை செல்லும் வழியில் தலித் குடியிருப்பு கள் இருக்கக்கூடாது என்று ஆதிக்க சக்திகள் கொடுத்த நெருக்கடிக்கு எதிராக போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். அதே இடத்தில் தலித் மக்களை குடியமர்த்தி வைத்த மகத் தான மக்கள் போராளி வீ.முத்துவீரன் ஆவார். அவரின் வீரதீரமான வழியில் அனைத்து தரப்பு மக்களையும் சாதி மதம் கடந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பாதையில் மக்களை  அணி திரட்டி மதவெறி, சாதிவெறி சக்திகளுக்கு எதிராக சமரசம் இல்லா போராட்டத்தை முன்னெடுப்போம். தியாகிகள் காட்டிய லட்சியப் பாதை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை  முன்னெடுப்போம். - ஆறு.பிரகாஷ் மாநிலக்குழு உறுப்பினர் (அ.இ.வி.தொ.ச.)
 

;