districts

img

தமிழ்ப் பண்பாட்டு கலை மரபினை வளர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர், டிச.29-  தமிழக அரசின் நிதி நல்கையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உரு வாக்கப்பட்டுள்ள, தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் முசிறி நிதிலாலயா இசை  மற்றும் நடனப்பள்ளி, ஈரோடு தமிழி  இசைக்களம் நாட்டார் கலை அறக்கட் டளை, ஓசூர் அபிநயம் ஆர்ட் அகாடமி  அறக்கட்டளைகள் தர வகுப்புகள் மற்றும் சான்றிதழ், பட்டய வகுப்புகள்  நடத்துவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந் தம் புதன்கிழமை மேற்கொள்ளப் பட்டது.  நிதிலாலயா இசை மற்றும் நட னப்பள்ளி, தமிழி இசைக்களம் நாட்டார் கலை அறக்கட்டளை, அபிநயம் ஆர்ட்  அகாடமி அறக்கட்டளை ஆகியன,  தமிழ் மொழியை வளர்த்தெடுக்கும் நோக்கில் தமிழ் இலக்கியப் பாடல் களை இசை, நாட்டிய வடிவமாக்கி பல்வேறு நாடுகளில் அரங்கேற்றி வரு கின்றன. இவ்வகையில் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் கூறுகையில், “இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் வாயிலாக நடத்தப் பெறும் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், நாட்டுப் புறக் கலைகள், சிலம்பாட்டம் ஆகிய  பாடப்பிரிவுகள் நிதிலாலயா இசை  மற்றும் நடனப்பள்ளி, தமிழி இசைக் களம் நாட்டார் கலை அறக்கட்டளை, அபிநயம் ஆர்ட் அகாடமி அறக்கட்டளை  வாயிலாக நடத்தப் பெற்று தமிழ்ப் பல் கலைக்கழகம் வழி தேர்வுகள் நடத்த வும், சான்றிதழ் வழங்கவும் வகை செய்யப்படும்” என்றார். பல்கலைக்கழக பதிவாளர் (பொ)  முனைவர் சி.தியாகராஜன், நிதிலாலயா  இசை மற்றும் நடனப்பள்ளி, தமிழி  இசைக்களம் நாட்டார் கலை அறக் கட்டளை, அபிநயம் ஆர்ட் அகாடமி அறக்கட்டளை இயக்குநர்கள், இப்புரிந் துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.