districts

img

சர்வதேச சிலம்பம் போட்டி வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பாராட்டு

திண்டுக்கல், ஜூன் 2- திண்டுக்கல் மேற்கு அசோக் நகரை சேர்ந்த 2  ஆவது வார்டு திமுக செய லாளர் பி. கிருஷ்ணசாமியின்  பேத்தி அவந்திகா. இவர் மது ரையில் உள்ள கேரன் பப்ளிக்  பள்ளியில் 4 வகுப்பு படிக்கி றார். மாணவி அவந்திகா மலேசியாவில் மே 25 முதல்  28 வரை நடைபெற்ற சர்வ தேச சிலம்பம் போட்டியில் பங்கேற்றார். 7-9 வரை நடை பெற்ற மகளிர் பிரிவில் ஒற்றை அலங்கார சுற்றில் வெள்ளி பதக்கமும் தனித்திறமை சுற்  றில் வெண்கல பதக்கமும் வென்றார் நிறைவாக நடை பெற்ற இறுதி சுற்றில் 12 பேருக்கு  இடையிலான போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்து  வெள்ளி பதக்கம் வென்றார்.  திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவல கத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக  மாநில துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரிய சாமி மாணவி அவந்திகா வை நேரில் அழைத்து பாரா ட்டி, வாழ்த்தினார். உணவு- உணவுப்பொருள் வழங் கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பழனி சட்ட மன்ற தொகுதி தி.மு.க. உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகிய இரு வரும் வெற்றி பெற்ற மாணவி யை பாராட்டி வாழ்த்தினர்.

;