திருவாரூர், ஜூலை13-
குடவாசல் ஒன்றியம், கண்டிரா மாணிக்கத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தோழர் அஞ்சான் (64) உடல்நலக் குறைவால் பாதிக் கப்பட்டு வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.
தோழர் அஞ்சான் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் கோ.வீரைய்யனுடன் இணைந்த நில மீட்புப் போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். கட்சி நடத்திய பல் வேறு போராட்டங்களில் பங்கேற்றுள் ளார். கண்டிரா மாணிக்கத்தின் மதிப்பு மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.
உடல்நலக் குறைவால் வீட்டில் சிகிச்சை பெற்று அவரும் அவரை மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, குடவாசல் தெற்குப் பகுதி ஒன்றியச் செயலாளர் எம்.கோபிநாத், நகர்க்குழு செயலாளர் டி.ஜி.சேகர் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எப்.கெரக் கோரியா, ஆர்.லெட்சுமி, விதொச ஒன் றியச் செயலாளர் எஸ்.கிருஸ்வநாதன் உள்ளிட்ட தோழர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.