இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் மே 13 அன்று காலமானார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம்,சித்தமல்லி கிராமத்தில் அவரது தோட்டத்தில் செவ்வாய்க்கிழமையன்று அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் மறைந்த செல்வராஜ் உடலுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி இரங்கல் உரையாற்றினார்.