மயிலாடுதுறை, டிச. 10 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்க டையூரை ஒட்டியுள்ள வெள்ளக்குளம், காலக்கட்டளை பகுதியில் நான்கு வழிச்சாலைக்காக (என்ஹெச் 45 ஏ) அப்பாவி ஏழை மக்களின் குடிசை களை அதிகாரிகள் அகற்ற முயன்றதை மார்க்சிஸ்ட் கட்சியினர் மீண்டும் தடுத்து நிறுத்தினர். கொள்ளிடம் முதல் நாகை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலை அமையவுள்ள பகுதிகளிலுள்ள விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதில் நகாய் அதிகாரிகளும் ஒப்பந்த நிறுவனமும் விவசாயிகளை மிக கேவலமாக நடத்திய நிலையில் பல்வேறு போராட் டங்களை பாதிக்கப்பட்ட விவசாயிகள் நடத்தினர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி அப்பிரச்சனையை கையிலெடுத்து பிரச்சார இயக்கங்கள் மற்றும் போராட் டங்களை நடத்தியது. அதிகாரிகள் உரிய இழப்பீடுத் தர உறுதியளித்து அப்பணிகள் நடந்து வரும் சூழலில், திருக்கடையூர் வெள்ளக்குளம்,
காலக் கட்டளை கிராமத்தில் சாலை அமைய வுள்ள பகுதியில் உள்ள வீடுகளை எந்த வித இழப்பீடும், மாற்று இடமும் வழங்கா மல் காவல்துறையின் துணையுடன் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வெள்ளியன்று அகற்ற முயன்றதை மார்க்சிஸ்ட் கட்சியி னர் மற்றும் பொதுமக்கள், விவசாயி கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடு பட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜி. கலைச்செல்வி, அம்மையப்பன் காபிரி யேல், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தமிழ்வாசகம், குணசேகரன், ஐயப்பன், கணேசன், கிளை செயலாளர்கள் இளையராஜா, உதயக்குமார், ஜெய பிரகாஷ், கே.பிரகாஷ், குணசுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடனடியாக பாதிக்கப்படும் வீடு களுக்குரிய இழப்பீடும், மாற்று இடமும் வழங்க வேண்டும். அதுவரை சாலைப் பணிகள் எதுவும் நடக்கவிடமாட்டோம் என எச்சரித்ததையடுத்து ஜேசிபி இயந்திரங்களுடன் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்ட காவலர்களும் அப்பகுதி யிலிருந்து கிளம்பிச் சென்றனர்.