அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மணப்பாறை வட்டக்குழு மற்றும் மருங்காபுரி வட்டக்குழு இணைந்து திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாதர் சங்க மணப்பாறை வட்டச் செயலாளர் ராஜாமணி, மருங்காபுரி பொறுப்பாளர் கவிதா, வட்டக்குழு உறுப்பினர் நஸ்ரின் பானு மற்றும் மாதர் சங்க உறுப்பினர்கள் வர்ஷா, ஹரிணி, சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.