மயிலாடுதுறை, ஜூலை 8 -
மயிலாடுதுறை மாவட்டம் ஆயப்பாடி கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் சமூக நல அறக்கட்டளை, சர்வதேச மனித உரிமைகள் குற்றத்தடுப்பு அமைப்பு மற்றும் விநாயகா மிஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு சமூக ஆர்வலரும் மாசா குரூப்ஸ் பொறுப்பா ளருமான பாரிஸ் மாஷா அலி தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக சர்வதேச மனித உரிமைகள் மற்றும் குற்றத் தடுப்பு அமைப்பு மாநில தலைவர் கோபிநாத் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து உரையாற்றினார். ரியாத் நாட்டின் ஜாஸீரா பாராமெடிக்கலின் சீனியர் மைக்ரோ பயாலஜிஸ்ட் இ.எம்.எம்.ஜாகிர் உசேன் ரத்தம் வழங்கி ரத்த தான முகாமை துவக்கி வைத்தார்.
பெண்களுக்கான பரிசோதனைகள், எலும்பு முறிவு, குழந்தைகள் நலம், தோல், கண், காது, மூக்கு, தொண்டை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்ட பரி சோதனை மற்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலி யர்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களை பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.