மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருண் பாலாஜி மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்ளிடம் ஒன்றியக் குழு உறுப்பினரும், புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவருமான அ.நேதாஜி-யின் வாழ்க்கை நல இணையேற்பு விழா வெள்ளியன்று மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலாளர் கே.கேசவன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், கே.பி.எஸ்.எம்.கனிவண்ணன் (காங்), இனாமுல் ஹசன், பழ.வாஞ்சிநாதன், கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.