புதுக்கோட்டை, டிச.9- புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டையை அடுத்த வாண்டையன் பட்டியில் வறுமையில் வாடும் 62 நரிக்குறவர் இன மக்களுக்கு கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை தலைமையில் புதனன்று உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சு.ரோஸ்லியாராஜமணி ஏற்பாட்டில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கந்தர்வ கோட்டை வட்டாட்சியர் புவி யரசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கருணாகரன், ஒன்றியக் குழுத் தலைவர் கார்த்திக், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், ஒன்றியச் செயலாளர் வி. ரெத்தினவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.