districts

‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தில் நுண் நிறுவன நிதியுதவி வழங்கல்

புதுக்கோட்டை, ஜூன் 10 - ‘

     வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம் ரூ.8.40 லட்சம் மதிப்பில் நுண் நிறுவன நிதிக்கான காசோலைகளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா திங்கள் கிழமை வழங்கினார்.

    புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி  ரம்யா தலைமையில் திங்கள்கிழமை நடை பெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உத வித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உத வித்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு  கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்களை  பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை கள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

     மேலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் 16 பயனாளிகளுக்கு பெட்டிக்கடை, மளிகைகடை, உணவகம், தையற்கடை, ஜெராக்ஸ்கடை, பாலகம் உள்ளிட்டவை அமைக்க ரூ.8.40 லட்சம் மதிப்பில் நுண்நிறு வன நிதிக்கான காசோலைகளையும் ஆட்சி யர் வழங்கினார்.

   தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட செயல் அலுவலர் கே.செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.