districts

img

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை, ஜூலை 13 -  

     புதுக்கோட்டை எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், மேலப்பட்டி கிராம  அறிவு மையம், குழந்தைகள் நல குழுமம் ஆகியவை இணைந்து பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை இலுப் பூரை மேலப்பட்டியில் வியாழக்கிழமை நடத்தின. ‘

    பெண்களும் சட்டமும்’ என்ற தலைப்  பில் குற்றவியல் வழக்கறிஞர் சி.கிருத்திகா,  குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், இளம்  சிறார் நீதி குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம்-2015, போக்சோ சட்டம்-  2012, பெண்கள் குடும்ப வன்முறை பாது காப்புச் சட்டம்-2005, வரதட்சணை முறை  தடுப்புச் சட்டம்-1961, மருத்துவ கர்ப்பத்தை நிறுத்துதல் சட்டம்-1971 சட்டங்கள் மூலம் எவ்வாறு உரிமைகளை பெறுவது என்பது குறித்து உரையாற்றினார்.

     நிகழ்ச்சிக்கு எண்ணை ஊராட்சி மன்றத் தலைவர் கே.நாகராஜ் தலைமை வகித்தார். பெண் குழந்தைகளின் பாது காப்பு குறித்து மாவட்டக் குழந்தைகள் நலக்  குழுமத் தலைவர் கே.சதாசிவம் பேசி னார். மேலாண்மைக் குழு தலைவர். கே. சிவசுப்பிரமணியன், குழந்தைகள் நலக் குழும உறுப்பினர் ஏ.ஜென்மராக்கினி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக  கிராம வள மைய கள ஒருங்கிணைப்பாளர் விமலா வரவேற்றார். லெட்சுமி நன்றி கூறி னார்.