districts

img

புதுகையில் கவிதை நூல்கள் அறிமுகவிழா

புதுக்கோட்டை, பிப்.29:-  புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் இரண்டு கவிதை நூல்கள் அறிமுக விழா மற்றும் பாராட்டுவிழா புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு வாசகர் பேரவைத் தலைவர் பேரா.சா.விஸ்வநாதன் தலைமை வகித்தார். கவிஞர் தங்கம்மூர்த்தி எழுதிய ‘சொற்கள் மீட்டிய இசை’ நூலினை கவிஞர் ஜெயபாஸ்கரன் அறிமுகம் செய்து பேசினார். மைதிலி கஸ்தூரிரெங்கன் எழுதிய ‘கனவின் இசைக்குறிப்பு’ நூலினை தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன் அறிமுகம் செய்தார். தமிழ்ச்சுடர் விருது பெற்ற கவிஞர் மகாசுந்தரைப் பாராட்டி பட்டிமன்றப் பேச்சாளர் ரெ.வெள்ளைச்சாமி பேசினார். கவிஞர்கள் தங்கம்மூர்த்தி, மைதிலி கஸ்தூரிரெங்கன், மகாசுந்தர் ஆகியோர் ஏற்புரை வழங்கினர். விழாவில் கவிஞர் நா.முத்துநிலவன், அஞ்சலிதேவி  தங்கம்மூர்த்தி, அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார், நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக கவிஞர் பீர்முகமது வரவேற்க, பேரா.கருப்பையா நன்றி கூறினார். நிகழ்ச்சியை உஷாநந்தினி தொகுத்து வழங்கினார்.