தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கொத்தங்குடி ஊராட்சி உதாரமங்களத்தில், கால்நடை மருத்துவத் துறை சார்பில் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் புண்ணியநல்லூர் கால்நடை உதவி மருத்துவர் ரகுநாத், ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினார். இதில் ஊராட்சித் தலைவர் பழனி, ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.