districts

img

இரவில் உடற்கூராய்வு செய்ய நடவடிக்கை கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கொச்சி, டிச.17- கேரளத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இரவு நேரத்தில் சடலங் களை உடற்கூராய்வு செய்வ தற்கான வசதியை ஏற்ப டுத்த வேண்டும் எனவும், 6  மாதங்களுக்குள் தேவை யான ஏற்பாடுகளை செய்ய வும் 5 மருத்துவக் கல்லூரி களுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி நெருக்கடியை கார ணம்காட்டி இரவு நேரத்தில்  உடற்கூராய்வு செய்வதற் கான வாய்ப்புகளை புறக்க ணிக்கக் கூடாது. கேரளத் தில் உள்ள அனைத்து மருத் துவக் கல்லூரிகளிலும் இரவு நேரத்திலும் உடற்கூராய்வு செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும்.  இரவு நேரத்தில் உடற்கூ ராய்வைத் தவிர்ப்பதற்கு தடயவியல் நிபுணர்கள் கூறும் காரணங்களை ஏற்க முடியாது. அரசின் நிதி நிலைக்கு ஏற்ப தடயவியல் மருத்துவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதி பி.வி.குஞ்ஞிகிருஷ்ணன் தனது உத்தரவில் தெரி வித்துள்ளார். இயற்கைக்கு மாறான மரணங்களின்போது, உடற் கூராய்வு நடவடிக்கையை விரைந்து முடித்து, உடலை உறவினர்களிடம் ஒப்ப டைக்க வேண்டும். நடை முறைகளை முடித்து உடலை  வீட்டுக்கு கொண்டு வர அரசு வசதி செய்து அதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும். இறந்தவரின் உறவினர்கள் உடலை எடுத்து  வர மருத்துவமனை, காவல்  நிலையம் என அலைக்கழிக் கப்படுவதை தவிர்க்க வேண்டும். உடல்கள் மீதான  விசாரணை மற்றும் உடற் கூராய்வு நடைமுறை களுக்கு கால அவகாசம் நிர்ணயித்து, காலதாமதம் செய்யும் அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சம்பந் தப்பட்ட துறைகளின் கூட்ட த்தை 6 மாதங்களுக்குள் கூட்டி காலக்கெடுவை முடிவு  செய்ய வேண்டும் என்றும்  தலைமைச் செயலாள ருக்கு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

;