districts

img

அரசு, தனியார் பள்ளிகளில் கரூர் ஆட்சியர் ஆய்வு

கரூர், டிச.18 - கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகை யில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப் படி, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர் வைத் துறை அமைச்சரின் ஆலோசனைப்படி பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் என மொத்தம்  1072 பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அந்த வகையில் முதல் கட்டமாக 18  அரசு பள்ளிகளில் 20 கட்டிடங்கள் கண்டறியப் பட்டு சனிக்கிழமை இடிக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதேபோல் தனியார் பள்ளி களுக்கு, பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மையை தெரிந்து அதற்கேற்றார் போல்  நடவடிக்கை மேற்கொள்ள சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. பொதுப் பணித்து றையின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களை அந்தத் துறை சார்ந்த அலுவலர்களும், ஊரக  வளர்ச்சித் துறையின் பராமரிப்பில் உள்ள  கட்டிடங்களை அத்துறை சார்ந்த அலுவலர்க ளும் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை யில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

;