அரியலூர், ஜூன் 17 - பசுந்தாள் உரம் என்பது பசுமையான சிதைக்கப்படாத பொருட்களை உரமாக பயன் படுத்திட, அதே நிலத்தில் விதைத்து அந்த தாவரம் பூ பூப்பதற்கு முன் அதே நிலத்தில் மடக்கி உழுது உரமாக்க வேண்டும். இது பசுந்தாள் உரம் பயிர் எனப்படும். மேலும் மரம் செடி கொடிகளின் தழை களையும் நிலத்தில் இட்டு மடக்கி உழவு செய்யலாம். இது பசுந்தழை உரம் எனப்படும். மண் வளமாகவும் நலமாகவும் இருக்க குறுவை (அ) சம்பா சாகுபடி செய்யப் போகும் நிலங்களில் பசுந்தாள் உரங்களை பயிரிட லாம். சணப்பு, தக்கைப்பூண்டு, மணிலா, அகத்தி மற்றும் கொளிஞ்சி போன்ற தாவ ரங்கள் பசுந்தாள் உரங்களுக்கு எடுத்துக் காட்டு ஆகும். இவை காற்றில் உள்ள நைட்ரஜனை கிரகித்து கொண்டு வேர் மற்றும் தண்டு முடிச்சு வாயிலாக நிலத்தில் தழைச்சத்தினை சேமிக்கிறது. நன்றாக கோடை உழவு செய்து அடுத்த சாகுபடிக்கு தயாராக உள்ள நிலையில், இந்த விதைகளை நிலத்தில் விதைக்கலாம். ஏக்கருக்கு 15-20 கிலோ வரை தேவைப்படும். விதைத்த பின் நீர் பாச னம் செய்து, 45-50 ஆவது நாளில் அவற்றை மடக்கி உழவு செய்வதால், அவை மக்கி மண்ணில் இரண்டற கலந்து நெல் நடவிற்கு தயாராகலாம். பசுந்தாள் உரப்பயிரின் பயன்கள் நிலத்தின் மண்வள கட்டமைப்பு மாறி மண்ணின் கரிமத் தன்மை அதிகரிக்கும். மண்ணில் காற்றோட்டம் ஏற்படும் இறுகிய தன்மை மாறும். நீர் பிடிப்புத் திறன் அதிகரிக் கும். களைச்செடிகளை கட்டுக்குள் வைக்க உதவும். மண் அரிப்பை தடுக்க உதவும். விளைச்சலில் 15-20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பசுந்தாள் உரப்பயிர், தக்கைப்பூண்டு, விதைகள் 50 சதவீத மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் முதல் வரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் ஏக்கருக்கு 20 கிலோ விதை 50 சதவீத மானி யத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படு கிறது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப் பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிலத்தின் மண்வளத்தை மேம்படுத்தி ரசாயன உரங்கள் பயன்பாட்டை படிப்படி யாக குறைக்க, பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வமுடன் முன்வர வேண்டும் என செந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா தெரி வித்துள்ளார்.