இராமநாதபுரம், மே.15 இராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங் கள் அறையை செவ்வா யன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு ஆய்வு மேற் கொண்டார். இராமநாதபுரம் நாடா ளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாது காப்பாக அறையில் வைக் கப்பட்டுள்ளதை சிசிடிவி கேமரா மூலம் கண்கா ணிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட ஆட்சியருமான விஷ்ணு சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் மற்றும் அரசு அலு வலர்கள் உடனிருந்தனர்.