districts

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

அரியலூர், மே 15 - அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி இராமசாமி  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு  எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.  இந்த வைப்பறையை மாவட்ட தேர்தல் அலுவலர், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலு வலர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, வேட்பாளர்கள் மற்றும்  வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் புதனன்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வில் அரிய லூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உட னிருந்தார். மேலும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பாது காப்பிற்கான குறிப்பேட்டு பதிவுகளை பார்வையிட்டு பதி வேட்டில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா கையெழுத்திட்டார்.