districts

திருச்சி மாநகரில் விதிகளுக்குப் புறம்பாக தரமின்றி போடப்படும் தார்ச்சாலைகள்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 3-

      திருச்சி மாநகரில் விதிகளுக்கு  புறம்பாக, தரமின்றி அமைக்கப்  படும் தார்ச் சாலைகள் குறித்து  ஆய்வு நடத்த வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

     இதுகுறித்து கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:

     திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடை  பணிக்காகவும், குடிநீர் குழாய்  பதிப்பதற்காகவும் தோண்டப் பட்ட சாலைகளை மீண்டும் அமைக்கும் போது தரமற்ற முறையில் சாலைகள் போடப் படுகின்றன.  

    பல தெருக்களில் ஏற்க னவே உள்ள சாலைகளை பெயர்த்து எடுக்காமல் அதன் மீதே புதிய தார்ச்சாலை அமைக்கப்படுவதால் வீடுகள்,  கடைகளின் படிகளை தாண்டி  மிக உயரமாக சாலை அமைக் கப்படுகிறது. கனமழை பெய்  யும் காலங்களில் பல வீடு களுக்குள் தண்ணீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது. பாதா ளச் சாக்கடை மேனுவல் அளவை  கணக்கிட்டு சாலை அமைப்ப தால் இது போன்ற நிலை உள் ளது. பல இடங்களில் சாலை  மிக உயரமாக, தரமற்ற முறை யில் அமைக்கப்பட்டு வருகிறது.

   உதாரணமாக, சமீபத்தில் போடப்பட்ட சாஸ்திரி சாலை மிக மோசமாக மேடும், பள்ள முமாக உள்ளது. மழை நீர்  செல்வதற்கு வழியே இல்லை.  மேலும் மழைநீர் தேங்கி சாலை கள் முழுவதும் சேதமடையும் நிலை உள்ளது. திருச்சி மாநக ரத்தின் முக்கிய சாலையான  இந்த சாலையில், பழைய சாலையை பெயர்த்து எடுக்கா மல், பாதாள சாக்கடை மேனு வலை பொறுத்து மேடும் பள்ள முமாகவும் அதன் மீதே தரமற்ற  சாலையாகவே அமைக்கப் பட்டுள்ளது.

   எனவே தமிழக அரசு உரிய  ஆய்வு செய்து பொதுமக்கள் வரிப்பணம் வீணாகாமல் பாது காக்கவும், மேற்படி சாலையை  ஆய்வு செய்து, ஒப்பந்ததாரரி டம் உரிய விசாரணை நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருச்சி மாநகர் மாவட்டக்  குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.  

   இவ்வாறு அவர் கூறியுள் ளார்.