districts

மகளிர் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீசார் சோதனை

புதுக்கோட்டை, ஜூலை 12 -

    புதுக்கோட்டை மாவட்ட மகளிர் திட்ட அலு வலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்கா ணிப்புப் பிரிவு போலீசார் செவ்வாய்க்கிழமை மாலை நடத்திய திடீர் சோதனையில், கணக்கில்  வராத ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.

   தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட இயக்க  மேலாண்மை அலகின் (மகளிர் திட்டம்) திட்ட  இயக்குநர் அலுவலகம் பேருந்து நிலையம் பின்புறம் பூமாலை வணிக வளாகத்தில் உள்ளது.

   திட்ட இயக்குநராக ரேவதி பணியில்  உள்ளார்.  இங்கு, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் நலத் திட்டங்களின் பயனாளி களிடம் இருந்து கமிஷன் பெற்றுக் கொண்டு, நலத் திட்டங்கள் வழங்கப்படுவதாக ஊழல்  தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீ சாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து துணைக் காவல் கண்கா ணிப்பாளர் இமயவர்மன் தலைமையில், ஆய்வாளர் பீட்டர் உள்ளிட்டோர் செவ்வா யன்று மாலை இந்த அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

   சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனை யின் முடிவில், கணக்கில் வராத ரூ.2 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.