districts

img

நான் முதல்வன் திட்டத்தில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவி

திண்டுக்கல், மே 15-  நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சட்டப் பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற பழனி மாற்றுத்திறனாளி மாணவியான சுமையா பானுவின்  சாதனைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண் டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர் மாணவி, சுமையா பானு. மாற்றுத்திறனாளி மாணவியான சுமையா பானு கண் பார்வை  குறைபாடு கொண்டவர். மேலும் கை விரல்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தவாறு அமையப்பெற்றவர். தன்னம்பிக்கைமிக்க மாணவியான சுமையா பானு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு  எழுதும்போது உதவி யாளர் இன்றி, தானே தேர்வை எழுதினார். தேர்வில் 540 மதிப்பெண் கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் 96, ஆங்கிலம் 59, புள்ளி யல் 98,வரலாறு 94, பொரு ளியல் 99, அரசியல் அறிவியல் 94 என மதிப் பெண்கள் பெற்றுள்ளார்.  அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உதவியைப் பெற்று தேசிய சட்டப் பல்கலைக் கழகம் நடத்திய நுழைவுத் தேர்வை எழுதி யுள்ளார் சுமையா பானு. தற்போது வெளி வந்த தேர்வு முடிவில் சட்டப் பல்கலைக்கழக தேர்வில் வெற்றி பெற்று மாணவி சுமையா பானு தேர்ச்சி பெற்றுள்ளார்.  அரசுப் பள்ளியில் பயின்ற சுமையா பானுவிற்கு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன.