திருச்சிராப்பள்ளி, அக்.6- தமிழகம் முழுவதும் அக்டோ பர் 11-ஆம் தேதி நடைபெறும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட் டத்தை வெற்றிகரமாக்கிட 9 கட்சிகளின் சார்பில் திருச்சி வெண்மணி இல்லத் தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமை வகித்தார். சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர். ராஜா, சிபிஐ மாநகர் மாவட்டச் செய லாளர் மு.சிவா, மாவட்ட நிர்வாகி இப்ராஹிம், காங்கிரஸ் கட்சி கோட்டத் தலைவர் அ.ரவி, விசிக சார்பில் மாந கர் மாவட்டச் செயலாளர் கே.என்.அருள், மாவட்டப் பொருளாளர் த. சந்தானமொழி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மாநிலச் செயலா ளர் ஹபீபுர் ரகுமான், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச் செல்வம், லெனின், சிபிஐ கட்சி நிர் வாகிகள் முருகன், முத்தழகு, விசிக கட்சியின் பல்வேறு பகுதி செயலா ளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அக்டோபர் 11 திருச்சி ஜங்சனில் இருந்து தலைமை தபால் நிலையம் வழியாக பாலக்கரை வரை மனிதச் சங்கிலி நடத்துவது. அனை வரும் கட்சி கொடிகளை தவிர்த்து பேட்ஜ் மற்றும் இயக்கத்தின் சால்வை அணிந்து, வாசகங்கள் அடங்கிய அட் டைகள் பிடித்து ஈடுபடுவது. அக்டோபர் 8, 9-ஆம் தேதிகளில் பொதுமக்களுடன் இணைந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று துண்டு பிர சுரம் கொடுப்பது. மனிதச் சங்கிலி போராட்டத்தை வெற்றிகரமாக்கிட அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகள், இயக்கங்கள் அமைப்பு கள் வியாபாரிகள், தொழிலாளர்கள், மாதர், மாணவர், இளைஞர் பொதுமக் கள் என அனைவரையும் சமூக நல்லி ணக்க மனிதச் சங்கிலியில் இணைந்திட அறைகூவல் மூலம் அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.