districts

img

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

அறந்தாங்கி, ஜூலை 3-

    புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி ஷிஹாபுதீன் அறக்கட்டளை சார்பாக 2022-2023 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு  மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.

   அதிக மதிப்பெண் பெற்ற செல்வ பாரதி, அசின், நவீன் பிரசாத், ஜெய மாலினி, முஹமது இம்தியாஸ், சத்யஸ்ரீ,  ராகவி, நதியா, லெட்சுமி, ரூபினா, ஹம் தியா சுல்தானா ஆகிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.  

   நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகி கள், உறுப்பினர்கள், அரசியல் பிர முகர்கள், ஆசிரியர்கள், ஜமாஅத் நிர்வாகி கள், கிராம நிர்வாகிகள், ஊராட்சி மன்ற  தலைவர், ஊராட்சி பிரதிநிதிகள், மாண வர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.