புதுக்கோட்டை, ஜூலை 8-
புதுக்கோட்டைக்கு வருவதாக இருந்த தமிழ்நாடு ஆளுநரின் வருகையை ரத்து செய்து கம்பன் கழகம் வேறு அழைப்பிதழ் வெளியிட்டதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வர வேற்றுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் நா. முத்துநிலவன், மாவட்டச் செயலாளர் ஸ்டா லின் சரவணன், பொருளாளர் கி.ஜெயபா லன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.தனிக் கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், புதுக்கோட்டை கம்பன் கழக விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்வதாக அழைப்பிதழ் வெளி யானது. தமிழ் பண்பாட்டுக்கும், கலாச்சாரத் திற்கும் எதிரான நிலைப்பாட்டினையும், சனா தனத்திற்கு ஆதரவான கருத்துகளை தொ டர்ந்து மேடைகளில் வெளிப்படுத்தி வரும் ஆளுநரின் வருகைக்கு பல்வேறு தரப்பி லும் எதிர்ப்பு வலுத்தது. இதன் ஒருபகுதி யாக கம்பன் விழா நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை தமுஎகசவும் முடிவு எடுத்திருந்தது.
இந்நிலையில், ஆளுநரின் வருகையை ரத்து செய்து வேறு அழைப்பிதழை கம்பன் கழக நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர். இதனை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வரவேற்கிறது. இத னைத் தொடர்ந்து கம்பன் விழா நிகழ்வு களில் தமுஎகச-வினர் பங்கேற்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.