மயிலாடுதுறை, செப்.22- மயிலாடுதுறை மாவட்டத்தில் நடை பெற்று வரும் அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் இயக்குநருமான வி.அமுதவள்ளி வியாழனன்று நேரில் ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி நக ராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்ச ரின் காலை உணவு திட்டத்தினையும், அகர கீரங்குடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளம் தூர்வா ரும் பணி, கழிவறை கட்டும் பணி, மெழுகு வர்த்தி கூடம் அமைக்கும் பணி, தரங்கம் பாடி வட்டம் காட்டுச்சேரியில் பெரியார் சமத்துவபுரத்தில் புதிதாக வீடு கட்டும் பணி, பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், மகளிர் கூட்டுறவு அங்காடி ஆய்வு, அங்கன்வாடி குழந் தைகளுடன் கலந்துரையாடல், காளகஸ்தி நாகபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் ஆய்வு, செம்பனார்கோயிலில் சமுதாய வளைகாப்பு விழா, இரத்த சோகை விழிப்பு ணர்வு முகாம், மயிலாடுதுறை மன்னம் பந்தல் ஊராட்சி பால்பண்னை அருகில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுமான பணி போன்ற பணிகளையும் அரசின் திட்டங் களையும் மாவட்ட கண்காணிப்பு அலுவ லர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் இயக்குநர் வி.அமுதவள்ளி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா எம்.முருகன், மாவட்ட வரு வாய் அலுவலர் சோ.முருகதாஸ், மயிலாடு துறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குர் எஸ்.முருகண்ணன், இணை இயக்குநர் (வேளாண்மை) சேகர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, மயிலாடுதுறை நக ராட்சி ஆணையர் செல்வபாலாஜி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.பாலாஜி, செம்பனார்கோயில் ஒன்றியக் குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர், மயிலாடு துறை நகராட்சி பொறியாளர் சணல்குமார், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் பிரேம்குமார், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள்) அ.தமீமுன்னிசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.