districts

img

சந்திரபாடி மீனவ கிராமத்திற்கு அரசுப் பேருந்து சேவை மலர்தூவி வரவேற்று பொதுமக்கள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை, ஜூலை 4 -

    மயிலாடுதுறை மாவட்டம் தரங் கம்பாடி அருகேயுள்ள சந்திரபாடி மீனவ  கிராமத்தில் முதன்முறையாக அரசுப் பேருந்து சேவை செவ்வாயன்று தொடங்கியது.

    தரங்கம்பாடி அருகேயுள்ள கட லோர கிராமமான சந்திரபாடி ஊராட்சி யில் சுமார் 3500 பேர் வசித்து வருகின்ற னர். தமிழ்நாடு - புதுச்சேரி மாநில  எல்லையில் அமைந்துள்ள கடலோர  கிராமமான இங்கு, நாடு சுதந்திரம டைந்ததிலிருந்து பேருந்து சேவையே இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் சுமார் 3 கி.மீட்டர் தூரம் நடந்து  சென்று இரு மாநில எல்லை சோத னைச்சாவடி அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தை அடைவர்.

    பின்னர் அங்கிருந்து காரைக்கால், பொறையார், தரங்கம்பாடி மற்றும் வெளியூர்களுக்கு சிரமப்பட்டு சென்று வந்தனர். தங்கள் ஊருக்கு அரசுப் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தர  வேண்டும் என கடந்த பல ஆண்டு களாக பொதுமக்கள் மற்றும் ஊராட்சி தலைவர் பிரமிளா ராஜ்குமார், மீனவ  பஞ்சாயத்தார்கள் கோரிக்கை விடுத்து  வந்தனர்.

   பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சந்திரபாடி மீனவ  கிராமத்திலிருந்து பொறையார், தரங்  கம்பாடி, திருக்கடையூர், ஆக்கூர் வழி யாக மயிலாடுதுறை வரை செல்லும் அர சுப் பேருந்து சேவை செவ்வாயன்று துவங்கியது. பூம்புகார் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா எம்.முரு கன் பேருந்து சேவையை கொடிய சைத்து தொடங்கி வைத்து பொறையார் பேருந்து நிலையம் வரை பேருந்தை இயக்கினார்.

     முதன்முறையாக தங்கள் ஊருக்கு வந்த பேருந்தை வரவேற்கும் விதமாக  வழி நெடுகிலும் நின்ற பொதுமக்கள் மலர்தூவி ஆரவாரம் செய்தனர்.

     நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட பொது  மேலாளர் இளங்கோவன், நாகை மண் டல வணிக மேலாளர் சிதம்பரகுமார், நாகை கோட்ட மேலாளர் ராமமூர்த்தி,  கிளை மேலாளர் ஆசீர்வாதம், தஞ்சை  மண்டல திமுக தகவல் தொழில் நுட்ப  அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர்,  மாவட்ட துணை செயலாளர் ஞான வேலன், ஒன்றிய செயலாளர்கள் எம். அப்துல் மாலிக், அமிர்த விஜயகுமார்,  ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ராஜ்  குமார் மற்றும் மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

;