districts

img

நூறு நாள் வேலை ஊதியத்தை வழங்குக!

கும்பகோணம்/திருச்சிராப்பள்ளி, அக்.12- நூறு நாள் வேலையில் மூன்று மாதமாக ஊதியம் தராததை கண்டித் தும், உடனே ஊதியத்தை வழங்கிட வலி யுறுத்தியும் தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் நாச்சியார்கோயில் இந்தி யன் ஓவர்சீஸ் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவிடைமரு தூர் தெற்கு ஒன்றியத் தலைவர் அனிதா  தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியத் தலைவர் ஜெசிந்தா, வல்லப பந்தலு  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தை விளக்கி தஞ்சை மாவட்ட செயலாளர் பி.எம்.இளங்கோ வன், மாநிலக் குழு உறுப்பினர் பழ. அன்புமணி, ஒன்றிய பொறுப்பாளர் ஆர்.சேகர், தெற்கு செயலாளர் பார்த்தி பன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். திருச்சிராப்பள்ளி திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, லால் குடி ஊராட்சிகளில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் கடந்த 3 மாதமாக வழங்கப்படாமல் உள்ள கூலியை உடனே வழங்க வேண்டும். 15 நாட்களுக் குள் கூலி வழங்காவிட்டால் இழப்பீடு தொகை 0.05 சதவீதம் வழங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி லால்குடி ரவுண்டானா அருகில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஜெகதீசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி விவசாயத் தொழிலாளர் சங்க  மத்தியக்குழு உறுப்பினர் சந்திரன், அடைக்கலராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் ரஜினி காந்த், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பாலு, புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் அருமைதாஸ் ஆகியோர் பேசினர். ஒன்றியச் செயலாளர்கள் சமுத்திர வள்ளி, சாமிகண்ணு, ஒன்றியத் தலை வர் தனலட்சுமி, ஒன்றியப் பொருளாளர்  செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.