districts

போட்டித் தேர்வு மாணவர்களுக்கு தஞ்சையில் இலவச பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர், ஜூலை 10-  

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்பு கள் நடத்தப்படுகின்றன.  

   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் I முதல்நிலைத் தேர்விற்கான அறிவிப்பு ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட உள்ளது. இதன்மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி யிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஓர் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குரூப் I முதல்நிலைத் தேர்வானது உத்தேசமாக நவம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ  பயிலும் வட்டத்தின் வாயிலாக, டிஎன்பிஎஸ்சி குரூப் I, குரூப்  II, குரூப் IIA முதல்நிலைத் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த  பயிற்சி வகுப்பு ஜூலை 14 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.

   தொடர்ந்து இப்பயிற்சி வகுப்பானது வார இறுதி நாட்களான சனி  மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெற உள்ளது. இந்த  வகுப்பு அனுபவமிக்க சிறப்பு வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படு வதோடு, பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் தேர்வின் பெயர், தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதி யினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலம் பெயரை  பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு அலுவலக தொலை பேசி எண்-04362-237037ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். 

;