மயிலாடுதுறை, ஜூன் 12- மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் விவசாயிகள், இடைத்தரகர்கள் இன்றி தங்களது விளைபொருட்களான நெல், உளுந்து, பயறு, பருத்தி, நிலக்கடலை ஆகியவற்றை தேசிய மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் (இ-நாம் முறையில்) விற்பனை செய்து பயன்பெற்று வருகின்றனர். இதனால் பயன்பெறும் விவசாயி கள் நெல், பருத்தி போன்ற விளை பொருட்களை சாகுபடி செய்து வரு கின்றனர். அந்த வகையில் நடப்பு பரு வத்தில் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பனார் கோயில், பரசலூர், மேம்மாத்தூர், கீழ் மாத்தூர், ஆறுபாதி, கிடாரங் கொண்டான், கஞ்சாநகரம், நல்லாடை, திருவிளையாட்டம், கொத்தங்குடி, விசலூர், திருவிடைக்கழி, அரசூர், விளாகம் உள்ளிட்ட பகுதிகளில் விவ சாயிகள், பருத்தியை சாகுபடி செய்தி ருந்தனர். இந்நிலையில் விவசாயிகள் சாகு படி செய்த பருத்தி பஞ்சை விற்பனைக் காக தேக்கி வைத்துள்ளனர். ஆனால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி கொள்முதல் செய்வதற்கான பணிகள் தற்போது வரை தொடங்கப் படாமல் உள்ளது. இதனால் விவசாயி கள், தாங்கள் விளைவித்த பருத்தியை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது பெய்யும் மழை யில் இருந்து, தங்கள் பருத்தியை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ள னர். பருத்தியை உடனே கொள்முதல் செய்ய வலியுறுத்தி செம்பனார்கோ யில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில வாரங்களாக மழை விட்டு விட்டு பெய்து வருவதால் அறுவடை செய்து பருத்தியை பாதுகாக்க முடியா மல் சிரமப்பட்டு வருகிறோம். இதனால் பருத்தி மழையில் நனைந்து எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி உடனே நல்ல விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஒழுங்கு முறை விற்பனை கூட அலுவலர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய தன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.