தஞ்சாவூர், ஆக.6 -
காய்கறிகளின் விலை உச்சத்தில் இருக்கும் போது, முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதை வாங்க வியாபாரிகள் வராததால் விவசாயிகள் வேதனை அடைந்துள் ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோ ணம் ஒன்றியம், சிவவிடுதி, காடு வெட்டி விடுதி பகுதிகளில், கொடி முருங்கை சுமார் 100 ஏக்கரில் சாகு படி செய்யப்பட்டு வருகிறது. இங்கு காய்க்கும் முருங்கைக்காய்களை பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி சந்தை களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்தாண்டு அதிக மகசூ லால் உரிய விலை கிடைக்காததால், விவ சாயிகள் 50 ஏக்கரில் மட்டுமே முருங்கைக் காய் சாகுபடியை செய்துள்ளனர். தற்போது, அதிக மகசூல் ஏற்பட்டுள்ளதால் விலை குறைந்துள்ளது. இதனால் முருங்கைக்காய் களை வாங்க வியாபாரிகள் வரவில்லை. விவ சாயிகளே அறுவடை செய்து, சந்தைக்கு கொண்டு சென்றால்கூட அங்கு கிலோ 10 ரூபாய்க்கு வாங்கக்கூட வியாபாரிகள் மறுக் கிறார்கள். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சிவவிடுதியைச் சேர்ந்த விவ சாயி ராமசாமி கூறுகையில், “ஒரு ஏக்கருக்கு சுமார் 1 டன் அளவுக்கு காய்கள் காய்த்துள் ளன. ஆனால் உரிய விலை இல்லாததால், வியாபாரிகள் வாங்க வரவில்லை. இத னால் காய்களை பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டோம். அவை முதிர்வடைந்து காய்ந்து கருகி வருகிறது. ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.
எனவே, தோட்டக்கலைத்துறையினர் எங்களது முருங்கைக்காய்களை உரிய விலைக்கு கொள்முதல் செய்து, சத்துணவு கூடங்களுக்கும், கோவில் அன்னதான திட்டத்தும், அரசு மருத்துவமனை, சிறைச் சாலைகளுக்கும் அனுப்பி வைத்தால் எங்க ளுக்கு ஓரளவு உரிய விலை கிடைக்கும்” என்றார்.
தற்போது தக்காளி, இஞ்சி, பூண்டு உள்ளிட்ட காய்களின் விலை உச்சத்தில் இருக் கும்போது, முருங்கைக்காய் விலையோ வீழ்ச்சி அடைந்து விவசாயிகளை வேதனைக் குள்ளாகியுள்ளது.