districts

img

ஓட்டுநர்கள் தினம்: மரக்கன்று நட்டு, ரத்த தானம் செய்து கொண்டாடிய சிஐடியு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 1- ஆண்டுதோறும் ஜூன் 1 ஆம்  தேதி ஓட்டுநர்கள் தினமாக கொண்டாடப் படுகிறது. இதையொட்டி திருச்சிராப் பள்ளி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர் உட்பட பல்வேறு இடங்க ளில் சிஐடியு சார்பில்  ஓட்டுநர் தினம் கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகர் ஆட்டோ, சாலை, அரசு  விரைவு போக்குவரத்து கழகம் சங்கங்கள் சார்பில் சத்திரம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் தினம் சனிக்கிழமை கொண்டா டப்பட்டது. விழாவிற்கு சாலை போக்குவரத்துத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு  திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவா சன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் சார்லஸ், மாவட்ட பொருளாளர் பழனி யப்பன் ஆகியோர் ஆன்-லைன் அபரா தத்தை கைவிட வேண்டும். ஹிட்டன் டிரைவ் சட்டத்தை திரும்பப் பெற வேண் டும். மோடி அரசின் மோட்டார் வாகனச் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பேசினர். மூத்த ஓட்டுநர்கள் ஐந்து பேருக்கு  பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்ட னர். இந்நிகழ்ச்சியில் அரசு போக்கு வரத்து கழக சங்க பொதுச் செயலாளர் மாணிக்கம், பொருளாளர் சிங்கராயர், நிர்வாகி சண்முகம், விரைவு போக்கு வரத்து கழக சங்க பொதுச் செயலாளர் ராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மரக்கன்று நடும் நிகழ்ச்சி உலக ஓட்டுநர் தினத்தையொட்டி, திரு வாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சிஐ டியு சாலை போக்குவரத்து தொழிலாளர்  சங்கம் மற்றும் சிஐடியு ஆட்டோ ஓட்டு நர்கள் சங்கத்தின் கிளை சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க கிளைத் தலைவர்  பொன்.சித்திரவேல் தலைமை வகித்தார்.  ஆட்டோ சங்க பொறுப்பாளர் பவுல்ராஜ் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டத்  தலைவர் எம்.கே.என். அனிபா, பேரூ ராட்சி தலைவர் ஆர்.ஆர்.ராம்ராஜ் ஆகி யோர் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை  துவக்கினர். கிரீன் நீடா பொறுப்பாளர்கள் ஜானகி ராமன், ராஜவேல், உதவும் மனங்கள் அறக் கட்டளை நிறுவனர் எஸ்.எஸ்.குமார், நீடா மங்கலம் இளைஞர் நற்பணி மன்ற பொறுப்பாளர்கள் மைதீன், அன்பரசு மற்றும் கார், வேன், ஆட்டோ ஓட்டுநர்  சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். எம்.ஆர்.எஸ்.குமார் நன்றி கூறினார். சிஐடியு ரத்த தானம் சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர்  சங்கம், அனைத்து போக்குவரத்து தொழி லாளர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்து உலக ஓட்டு நர்கள் தினத்தையொட்டி ரத்த தான நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு சிஐடியு மாவட்டத் தலை வர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், திமுக நகரச் செயலாளர் ஆ.செந்தில் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர்,  பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், அனைத்துப் போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் கே. ரெத்தினவேல், அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க மண்டலப் பொதுச் செய லாளர் ஆர்.மணிமாறன் உள்ளிட்டோர்  பேசினர். உலக ஓட்டுநர் தினத்தையொட்டி 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். மயிலாடுதுறை ஓட்டுநர் தினத்தையொட்டி மயிலாடு துறை மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட  இடங்களில் சிஐடியு சங்க கொடியேற்றி  இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் சாலை போக்கு வரத்து மாவட்டத் தலைவர் எஸ்.என்.டி. ரமேஷ், மாவட்டச் செயலாளர் லெ.அந்தோணிசாமி மற்றும் சிஐடியு மாவட்டத் தலைவர் மு.கலைச்செல்வன், மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன் கலந்து கொண்டனர். மாவட்டம் முழு வதும் 20-க்கும் மேற்பட்ட ஆட்டோ, கார்  நிறுத்தங்களில் கொண்டாடப்பட்டது.

;