districts

img

ஏழை மாணவர்களுக்கு 26 ஆண்டுகளாக ஆங்கில பேச்சுப் பயிற்சி

புதுக்கோட்டை, மே 30-  ‘ஆண்டனீஸ் ஸ்போக்கன் இங்லீஸ்’ அகாடமியின் சார்பில் 26-ஆம் ஆண்டு கோடை ஆங்கில பேச்சுப்பயிற்சி நிறைவு விழா புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ‘ஆண்டனீஸ் ஸ்போக்கன் இங்லீஸ்’ சார்பில் புதுக்கோட்டையில் தொடர்ந்து 26 ஆண்டுகளாக கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை யில் நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்பில் 200 முதல் 300 மாணவ, மாணவி கள் வரை பங்கேற்று பயனடைந்து வரு கின்றனர். பச்சைப் பூமி அமைப்பின் நிறுவன ரும், ஆங்கில ஆசிரியருமான ஆண்டனி இப்பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். அதனொரு பகுதியாக கடந்த 60 நாட்களுக்கும் மேலாக நடை பெற்ற 26-ஆம் ஆண்டு பயிற்சி நிறைவு விழாவிற்கு ஓய்வுபெற்ற ஆங்கிலப் பேராசிரியர் ஹரிராம் ஜோதி தலைமை வகித்தார். பச்சைப் பூமி அமைப்பின் தலைவர் வேங்கை ஆரோன், அன்னை கல்லூரி தாளாளர் சேவியர் ஆகியார் முன்னிலை வகித்தனர். கவிஞர் மு.கீதா, ஆசிரியர்கள் சேக்முகமது, அருணாச்சலம், ரமேஷ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் பயிற்சி வகுப்பை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திவரும் ஆங்கில ஆசிரியர் ஆண்டனி பாராட்டப்பட்டார். முன்னதாக ஆசிரியர் ஆண்டனி வரவேற்க, பாஸ்கர் நன்றி கூறினார்.