பொன்னமராவதி, டிச.1 - பொன்னமராவதி அருகே நகரப்பட்டியில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி விழிப்பு ணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கலை பயண குழுவினரின் மூலம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் தலைமை வகித்தார். அம்மாபட்டி தொடக்கப்பள்ளி, நகரப் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாண விகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், கரகாட் டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நாடகம் ஆகிய கலைகள் மூலம், இல்லம் தேடி கல்வி யில் தன்னார்வலராக சேர்வது பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் நடித்து காட்டப்பட்டது. நிகழ்ச்சியிலிருந்து மாணவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் நல்லநாகு, ஆசிரிய பயிற்றுநர்கள் சிவகுமார், கல்யாணி, அம்மா பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலை மையாசிரியர் ஜெயராணி மற்றும் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கோவிந் தன், அறிவியல் இயக்க வட்டார நிர்வாகிகள் தேவேந்திரன், ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.