மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கூட்டுறவு அங்காடி, நேரடி கொள்முதல் நிலையம் ஆகியவற்றை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பெரியசாமி, மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம்) ராஜ்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.