திருச்சிராப்பள்ளி/திருவாரூர்/கரூர், ஜூலை 8 -
தமிழ்நாடு முழுவதும் தீக்கதிர் ஆண்டு சந்தா சேர்ப்பு பணி நடைபெற்று வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட இடைக் கமிட்டிகள் சார்பில் சனிக்கிழமை தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் ஆகி யோர் தீக்கதிர் சந்தாக்களை பெற்றுக் கொண்ட னர்.
துறையூரில் நடந்த நிகழ்ச்சிக்கு துறையூர் ஒன்றியச் செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் சங்கிலித்துரை, ராஜேஷ், பொன்னு சாமி ஆகியோர் 21 சந்தாக்களை வழங்கினர்.
மேலும் எல்.ஐ.சி லிகாய் சங்க பொறுப்பாளர் மனோகர் ஒரு ஆண்டு சந்தா ரூ.2000 வழங்கி னார். உப்பிலியபுரம் இடைக்கமிட்டி சார்பில் ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்துக்குமார் 10 சந்தா வழங்கினார். முசிறி இடைக்கமிட்டி சார்பில் ஒன்றியச் செயலாளர் டி.பி.நல்லு சாமி 12 சந்தா வழங்கினார். தொட்டியம் இடைக்கமிட்டி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமநாதன் 8 சந்தா வழங்கி னார்.
மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஊழியர் கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். இதில் மாவட்டக் குழு உறுப்பினர் பூமாலை மற்றும் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் 10 சந்தா வழங்கினர். மண்ணச்ச நல்லூர் கிழக்கு இடைக்கமிட்டி சார்பில் பேரூ ராட்சி கவுன்சிலர் சாந்தி தலைமையில் எஸ். கல்லுக்குடி கிராம கூட்டம் நடந்தது. கூட்டத் தில் ஒன்றியச் செயலாளர் கனகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 18 சந்தா வழங்கினர்.
இந்நிகழ்ச்சிகளில் 148 ஆண்டு மற்றும் அரையாண்டு தீக்கதிர் சந்தாக்களை கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை, புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெய சீலன் ஆகியோரிடம் வழங்கினர். எஸ்.கள்ளுக்குடி கிராம பொதுமக்கள் தீக்க திர் நாளிதழ் படிப்பதற்காக, கிராம கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களே வசூலில் ஈடுபட்டு ஒரு ஆண்டு சந்தா வழங்கியது குறிப்பிடத் தக்கது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் பெறப்பட்ட 652 தீக்கதிர் சந்தாவுக்கான தொகை ரூ.7,83, 800 சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் பெ.சண்மு கத்திடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
திருத்துறைப்பூண்டி (வடக்கு) ஒன்றியச் செயலாளர் வி.டி.கதிரேசன் 11 ஆண்டு சந்தா மற்றும் 9 அரையாண்டு சந்தாக்களுக்கான தொகையை வழங்கினார். திருத்துறைப் பூண்டி (தெற்கு) ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல்மார்க்ஸ் 5 ஆண்டு மற்றும் 90 அரை யாண்டு மற்றும் 25 தினசரி சந்தாக்களுக்கான தொகையை வழங்கினார். திருத்துறைப்பூண்டி நகரம் சார்பாக நகரக் குழு செயலாளர் கே.கோபு 14 ஆண்டு மற்றும் 30 அரையாண்டு சந்தாக்கான தொகையை வழங்கினார்.
கோட்டூர் ஒன்றியச் செயலா ளர் எல்.சண்முகவேல் 4 ஆண்டு, 12 அரை யாண்டு மற்றும் 5 தினசரி சந்தாவுக்கான தொகையை வழங்கினார். முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி 5 ஆண்டு மற்றும் 24 அரையாண்டு சந்தாவுக் கான தொகையை வழங்கினார். முத்துப் பேட்டை நகரத்தில் பெறப்பட்ட 10 ஆண்டு மற்றும் 10 அரையாண்டு சந்தாவுக்கான தொ கையை நகரச் செயலாளர் சி.செல்லத்துரை வழங்கினார். மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் கே. ஜெயபால் 2 ஆண்டு மற்றும் 5 அரை யாண்டு சந்தாவுக்கான தொகையை வழங்கி னார். மன்னார்குடி நகரச் செயலாளர் ஜி.தாயு மானவன் 12 ஆண்டு மற்றும் 9 அரையாண்டு சந்தாவுக்கான தொகையை வழங்கினார்.
சிஐடியு மாவட்டக் குழு சார்பாக மாவட்டச் செயலாளர் டி.முருகையன், தலைவர் எம்.கே. என்.அனிபா முன்னிலையில் 34 ஆண்டு சந்தா மற்றும் 6 அரையாண்டு சந்தாவுக்கான தொகை வழங்கப்பட்டது. சந்தா வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.ஜோதிபாஸ், கே. தமிழ்மணி, கே.என்.முருகானந்தன், ஆர்.குமாரராஜா மற்றும் மாவட்ட, ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கரூர்
கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகரம், கரூர் ஒன்றியம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர், அரவக்குறிச்சி ஆகிய ஒன்றியங்களில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், கா.கந்தசாமி, பி.ராஜூ, கே.சக்திவேல், இரா.முத்துச்செல்வன், பி.ராமமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.வி.கணேசன், ஒன்றியச் செயலாளர்கள் எம்.தண்டபாணி, ராஜேந்திரன், எம்.ஆறுமுகம், பி.பழனிவேல், மணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.
கரூர் மாவட்டத்தில் இதுவரை ஓராண்டு சந்தா-66, ஆறு மாத சந்தா-74, மாத சந்தா- 18 என மொத்தம் 158 சந்தாக்கள் பெறப்பட்டு உள்ளன.