கும்பகோணம் டிச.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பனந்தாள் ஒன்றிய 13-ஆவது மாநாடு திருப்பனந்தாளில் நடை பெற்றது. மாநாட்டிற்கு டி.ஜி. ராஜேந்திரன், கே சாமிநாதன், இ. பொன்னி ஆகியோர் தலைமை வகித்தனர் அஞ்சலி தீர்மானத்தை ஏ.எஸ். பாரதி வாசித்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் பேசினார். வேலை அறிக் கையை ஒன்றியச் செயலா ளர் சாமிக்கண்ணு வாசித் தார். மாநாட்டுத் தீர்மானங்க ளை டி. காசிநாதன் வெற்றிச் செல்வி, ஆர். கணேசன் ஆகியோர் முன்மொழிந்த னர். மாவட்டக்குழு உறுப்பி னர் கோ.அரவிந்த்சாமி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சின்னை. பாண்டியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் டி.ஜி.ராஜேந்திரன், ஏ.எஸ்.பாரதி, டி.காசிநாதன், வெற்றிச்செல்வி, எஸ் தினேஷ் குமார், கே சாமி நாதன், நடேசன் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டு திருப்பனந்தாள் ஒன்றியச் செயலாளராக டி. ராஜேந்தி ரன் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டில் திருப்ப னந்தாள் பகுதியில் கோவில், மடம் புறம்போக்கு இடங்க ளில் குடியிருக்கும் மக்களு க்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். திருப்ப னந்தாள் கோவில், மடம், அறக்கட்டளை, குத்தகை விவசாயிகளையும், குடியி ருக்கும் மக்களையும், கடை வியாபாரிகளையம் வெளியேற்றக் கூடாது திருவிடைமருதூர், பூம்புகார், சீர்காழி, மயிலாடு துறை ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கொத்தடி மைகளை மீட்க நடிப்பிசைப் புலவர் கே ஆர் ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.