மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரை அடுத்துள்ள வெள்ளக்குளம் கிராமத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தரங்கம்பாடி ஒன்றியக் குழு சார்பில் கேஸ் சிலிண்டர் தொடர் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் வெள்ளக்குளம் பேபி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜி.வெண்ணிலா, ஒன்றிய செயலாளர் டி.ஆர்.ராணி, தலைவர் ஷண்முகவள்ளி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர்.