districts

img

கரும்புவிவசாயிகள் மீது தாக்குதல்: திருத்துறைப்பூண்டியில் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, செப்.28- தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் அருகே உள்ள திருமண்டங் குடியில் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயி களுக்கு வழங்க வேண்டிய ரூ. 157  கோடி நிலுவைத் தொகையைப் புதிய ஆலை நிர்வாகம் வட்டியுடன்  வழங்க வேண்டும். விவசாயிகளின்  பெயரில் போலியாக திருஆரூரான்  சர்க்கரை ஆலை நிர்வாகம் வாங் கிய சுமார் ரூ. 115 கோடியை தள்ளு படி செய்து, விவசாயிகளை சிபில்  ஸ்கோரிலிருந்து தீர்த்து வைக்க வேண்டும்.  திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே  ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆலை அருகே கரும்பு விவசாயிகள் தொடர்ந்து 301-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநி லப் பொதுச் செயலர் சாமி. நட ராஜன், தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்க மாநிலப் பொதுச் செயலர்  டி. ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் சின்னை. பாண்டியன் உள்பட 40 விவசாயிகளைக் காவல் துறை யினர் வலுக்கட்டாயமாகப் பிடித்து  கைது செய்தனர்.  காவல்துறையின் நடவடிக் கைக்கு கண்டனம் தெரிவித்து திருத்  துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் மாவட்டச்  செயலாளர் எம்.சேகர் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர் செயலாளர் எம்.ஜெயபிர காஷ், ஒன்றியச் செயலாளர் முத் துச்செல்வன், எஸ் சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூ ரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.அய்யநாதன், ஒன்றியத் தலைவர் ஏ.எம்.வேதாச்சலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த  தலைவர் ஆர்.சி.பழனிவேலு, மாவட் டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, வை.சிதம்பரம், பா. காசிநாதன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.