districts

img

டாஸ்மாக்கில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

தஞ்சாவூர், மே 20-  டாஸ்மாக்கில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என  தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத் திறனாளிகள் பணியாளர்கள் நலச் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத் திறனாளிகள் பணியாளர்கள் நலச்சங்கத்தின் தஞ்சாவூர், புதுக் கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டப் பேரவை கூட்டம் ஞாயிற் றுக்கிழமை தஞ்சாவூரில் நடை பெற்றது. பட்டுக்கோட்டை கோட்ட பொறுப்பாளர் கந்தசாமி வரவேற் றார். மாநில கவுரவத் தலைவர் செல்வராஜ், மாநில அமைப்புச் செயலாளர் கருணாநிதி, மாநில துணைச் செயலாளர் சந்திரமோ கன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கூட்டத்திற்கு தலைமை வகித்து மாநில பொதுச் செயலாளர் பி.அரியகுமார் சிறப்புரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்ட துணைச் செயலாளர் வெற்றிவேந்தன் நன்றி கூறினார். புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மேகநாதன், தஞ்சா வூர் மாவட்டப் பொருளாளர் புலேந்திரன், தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர் குமார், தஞ்சாவூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அம்பிகாபதி உள்ளிட்ட  பலர் பேசினர். தமிழகம் முழுவதும் டாஸ் மாக் கடைகளில் சுமார் 600 மாற்றுத் திறனாளிகள், கடந்த 21 ஆண்டு களாக பணியாற்றி வருகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கு இடை யில் மாற்றுத்திறனாளிகள் டாஸ் மாக் கடைகளில் பணியாற்றுவ தால், இவர்களின் எதிர்காலத்தை  கருத்தில் கொண்டு தமிழக அரசின் பிற துறைகளிலோ அல்லது டாஸ்மாக் நிர்வாகத் திலோ பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வெகு தொலைவுகளுக்குச் சென்று பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது இருப்பிடத்தின் அருகிலேயே உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்ற பணியிட மாறுதல் வழங்க வேண்டும். மாற்றுத்திற னாளிகளுக்கு செயற்கை கால்  மற்றும் கை போன்ற உபகர ணங்கள் வாங்க மருத்துவ நிதி யிலிருந்து நிதி வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் பணி யாற்றி வரும் மாற்றுத்திறனாளி கள் திடீரென இறக்க நேரிட் டால், அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசின் பிற  துறைகளில் வாரிசு அடிப்படை யில் வேலை வழங்க வேண்டும்.  இச்சங்கத்தின் சார்பில் ஜூன் மாதம் திருச்சி அல்லது தஞ்சாவூ ரில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்பது என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

;