districts

img

சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

நாகர்கோவில், ஜுலை 2-

     சுற்றுலாத்தலமான கன்னியா குமரிக்கு கோடை விடுமுறை முடிந்த தாலும், பள்ளிகள் திறக்கப்பட்டதா லும் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டிருந்தது. இந்த நிலையில்  ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை யொட்டி கன்னியாகுமரியில் ஆயி ரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குமரி மாவட்டம் மட்டு மின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும்  சுற்றுலா பயணிகள் குடும்பமாக வந்தனர்.

     குமரி மாவட்டத்தில் வெயிலில்  தாக்கம் அதிகமாக இருக்கிறது. அத னால் மாலை நேரத்தில் கன்னியா குமரி உட்பட மாவட்டத்தில் உள்ள முக்கியமான கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  மேலும் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதனால்  கடற்கரைப் பகுதியில் சுற்றுலா காவல ரும், கடலோர பாதுகாப்புகுழும காவல ரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.