districts

img

திருவிக நகரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்...

மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்தும் புதிய குற்றவியல் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், சிபிஎம் திருவிக நகர் பகுதிக் குழு சார்பில் நியூ பேரன்ஸ் சாலையில் பகுதிக் குழு உறுப்பினர் என்.மோகன் தலைமையில் திங்களன்று (ஆக. 19) கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி, பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் பா.தேவி, எம்.அசோக்குமார், வி.ஜெகதீஷ், ஏ.ஜி.ஃபர்மான் ஆகியோர் பேசினர்.