நாகப்பட்டினம்,ஜூன் 27- நாகப்பட்டினம் மாவட் டம் திருப்பூண்டி ஊராட்சி யில் 100 நாள் வேலை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கட்சியின் கீழையூர் கிழக்கு ஒன்றியக் குழு சார்பாக நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் அன்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி. சுப்பிரமணியன், கீழை யூர் கிழக்கு ஒன்றிய செயலா ளர் எம்.அப்துல் அஜீஸ் ஆகி யோர் பேசினர். வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக் கப்பட்டது.