கும்பகோணம், டிச.12- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, 24 மணி நேரமும் மருத்துவர் பணியாற்றும் வகையில் நியமனம் செய்ய வேண்டும். பெண் மகப்பேறு மருத்துவரை பணியில் அமர்த்த வேண்டும். உயிர்க் காக்கும் மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். மருத்துவமனை யில் மருத்துவர்கள் தங்குவதற்கு தனி இருப்பிட வசதி செய்து தர வேண்டும். போதிய செவிலியர்களை பணி அமர்த்த வேண்டும். இசிஜி, சிடி ஸ்கேன் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில் நாச்சியார்கோவில் மருத்துவமனை அருகில் தொடர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பழனிவேல் தலைமை வகித்தார். நாச்சி யார்கோவில் கிளைச் செயலாளர் பார்த்தி பன், மாத்தூர் கிளைச் செயலாளர் ஆரோக் கியதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால் பேசினார். ஒன்றிய குழு மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். பின்பு, சம்பந்தப்பட்ட மருத்துவமனை யின் மருத்துவர் சதீஷ் மற்றும் நாச்சியார்கோ வில் காவல் ஆய்வாளர் ரேகா ராணி ஆகி யோர் போராட்டக் களத்திற்கு வந்து, சிபிஎம்-இன் அனைத்து கோரிக்கைகளையும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து, விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.