districts

img

கீழநம்பிபுரம் கிராமத்திற்கு பேருந்து இயக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, டிச.17- எட்டயபுரம் தாலுகா கீழநம்பிபுரம் கிரா மத்திற்கு விளாத்திகுளம் போக்குவரத்து பணி மனையில் இருந்து வழித்தடம் 106 வழியாக பேருந்து இயக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில் பேருந்துகள் தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டன.  மீண்டும் தமிழக அரசு தளர்வுகளை அறி வித்து வழக்கம்போல் பேருந்துகளை இயக்க  உத்தரவிட்டது. அப்போது ஏற்கனவே விளாத்திகுளம் இருந்து கிளம்பி கீழநம்பிபுரம் வழியாக கோவில்பட்டிக்கு இயக்கப்பட்ட பேருந்து நிறுத்தப்பட்டுவிட்டது. மற்ற வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்ட பிறகும் கீழநம்பிபுரம் கிராமத்திற்கு பேருந்து கள் இயக்கப்படவில்லை. இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவ  மாணவிகள், விவசாயிகள் ஆறு கிலோமீட்டர்  நடந்து சென்றால் மட்டுமே மெயின் ரோட்டை  அடைய முடியும் என்ற சூழ்நிலையில் மிகவும்  அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும்  உடனடியாக இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பலமுறை கோரி க்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் வெள்ளி யன்று விளாத்திகுளம் போக்குவரத்து கழக பணிமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கீழ நம்பி புரம் முன்னாள் செய லாளர்  வெள்ளச்சாமி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  கு.ரவீந்திரன், எட்டையபுரம் தாலுகா செய லாளர் மணி, விளாத்திகுளம் தாலுகா செயலா ளர் ஜோதி ,விவசாய சங்க மாவட்ட குழு உறுப் பினர் நடராஜன், கீழநம்பிபுரம் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.